தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் இன்று காலை நடந்தது. தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணியும், அவரை எதிர்த்து சுயேட்சையாக வித்யாசாகரும் போட்டியிட்டனர்.
இதில் ஆர்.கே. செல்வமணி 1, 386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகருக்கு வெறும் 100 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
துணைத்தலைவராக கே.எஸ்.ரவிக்குமார் 1,489 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இயக்குநர் சங்க பொதுச்செயலாளராக ஆர்.வி உதயகுமாரும், பொருளாளராக பேரரசும் ஏற்கனவே போட்டியின்றி தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.வி.உதயகுமார்போட்டியிட்ட பொதுச் செயலாளர் பதவிக்கு யாரும் போட்டியிடாததால்,ஆர்.வி.உதயகுமார் பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இணைச் செயலாளர்கள் பதவிக்கு போட்டியிட்ட சுந்தர் சி., ஏகம்பவாணன்,
லிங்குசாமி, சித்ரா லட்சுமணன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.