
கோமாளி பட முன்னோட்டக்காட்சி புதிய சிக்கலை உருவாக்கியிருக்கிறது.ரஜினியின் ரசிகர்களும் அவர்களின் கோபத்தை காட்டி வருகிறார்கள்.
கோமாளி பட டிரெய்லரில் ரஜினி அரசியலுக்கு வருவதைப் பற்றி ஜெயம் ரவியும் ,யோகிபாபுவும் பேசிக்கொள்ளும் வசனம் கிண்டல் செய்வது மாதிரி அமைந்திருக்கிறது.
அதாவது அவர் பல வருஷங்களாக அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டு ஏமாற்றுவதாக ஒரு தொனி தெரியும்.
இதைப் பற்றி தனது கருத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேசிடம் கமல்ஹாசன் தெரிவித்திருப்பதாக மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறி இருக்கிறார்.
“நம்மவர் இன்று கோமாளி பட டிரெய்லரைப் பார்த்தார். ரஜினியின் அரசியல் வருகை பற்றிய விமர்சனத்தைப் பார்த்து அதை தன்னால் காமடியாக பார்க்க முடியவில்லை என்று தயாரிப்பாளருக்கு போன் பண்ணி தெரிவித்திருக்கிறார்
இதை பற்றி ரஜினியின் கருத்து என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.”












