Friday, January 22, 2021
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

விஜய் டி.விக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ்!

admin by admin
October 26, 2015
in News
0
594
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

என்னை பரிகாசம் செய்யும் வகையிலும்,என்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் ”என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”என்ற வசனத்தை அடிக்கடி ஒளிபரப்பி கிண்டலடிப்பதா? எனக்கூறி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விஜய் தொலைகாட்சிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

laksmi-1 இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “அது இது எது” நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு பகுதியில், நான்“சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியில் பேசிய,”என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”என்ற வசனத்தை,தொடர்ந்து என்னை பரிகாசம் செய்யும் வகையிலும்,என்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும்ஒளிபரப்பியதற்காக சட்டபடிஎன்னுடையகண்டனத்தை தெரிவித்து,எனது வழக்கறிஞர் மூலம் விஜய் தொலைகாட்சிக்கு சட்டஅறிக்கை அனுப்பி உள்ளேன்.

You might also like

சசிகலாவுக்கு கொரானா தொற்று ! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

சீமானுடன் பார்த்திபன் பேசிய ரகசியம் என்ன?

இயக்குநராக மாறுகிறார் ,தயாரிப்பாளர்.!

முதல் முறை அது ஒளிபரப்பப்பட்ட பொழுது அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன்.இன்னும் சொல்லப் போனால் பெரிதும் பிரபலமாகவே,அந்த வசனத்தையே தலைப்பாக வைத்து சில தனியார் தொலைகாட்சியில் நிகழ்ச்சி நடத்த நான் பேச்சு வார்த்தை செய்தேன்.அதில்இதற்கு காரணமான விஜய் தொலைக்காட்சியும் அடங்கும். இருந்தசூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி சுவராசியமான நிகழ்ச்சியின் மூலம் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை அலச வேண்டும் என்பதே எனது முதல் நோக்கமாக இருந்தது. ஆனால்தொடர்ந்துஇதே வசனம் பல்வேறுதிரைப்படங்களிலும், வேறு வேறு நிகழ்ச்சிகளிலும்பயன்படுத்தப்பட்டு வந்தது.இது மட்டுமல்லாமல் மிக உச்சமாக “ரஜினிமுருகன்” திரைப்படத்தில், இதே வசனத்தை பல்லவியாக வைத்து பாடலும் உருவாகிஇருக்கிறது. இது போன்ற காரணங்களால் நானும் என் குடும்பத்தினரும்பொது இடங்களிலும்சமூக வலைதளங்களிலும் பல்வேறு பின் விளைவுகளையும்,விரும்பதகாத சூழலையும் சந்திக்க நேர்ந்தது. இப்படிபட்ட தொடர் பிரச்சனைகளால் இந்த வசனம் எந்த சூழலில் சொல்லப்பட்டது? எதற்காக சொல்லப்பட்டது?என்பதை மிக வலியோடு ஒரு வீடியோ பதிவின் மூலம் சமூக வலைதளத்தில் வெளியிட்டேன்.அதன் பிறகு சிறிதுசிறிதாக இந்த பிரச்சனைகள் குறையத் தொடங்கியது.

laksmi-2இப்படிபட்ட சூழலில் இப்பிரச்சனையை மீண்டும்தூண்டும் வகையில் விஜய் தொலைக்காட்சி மறுபடியும்“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா-பகுதி2” என்ற ஒரு விளம்பர ப்ரோமோவை வெளியிட்டது. இதை மிக எதேச்சியாக01-10-2015ஆம் தேதி பார்க்க நேர்ந்தது.இது மீண்டும் எனக்கு விரும்பத்தகாத வகையிலும்அத்து மீறுவதாகவும் இருக்கிறது. மீண்டும் இந்த பிரச்சனையை ஆரம்பத்தில் இருந்து என்னால் சந்திக்கவோ விளக்கவோ என்னுடையபரபரப்பான வேலைகளும்,உடல்நிலையும் இடம் கொடுக்கவில்லை.விஜய் தொலைகாட்சியின் பொது மேலாளர் திரு.ஸ்ரீராம் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எனது எதிர்ப்பை பதிவு செய்து இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டாம் என்று தெரிவித்து இருந்தேன்.ஆனால் அதற்கு எந்த பதிலும் வரவில்லை.இதன் காரணமாக நான் கமிஷ்னரை அணுகி புகார் அளித்தேன். இது குற்றவியல் வழக்கு சார்ந்தது அல்ல என்பதால் அவர்கள் என்னை நீதிமன்றம் மூலம் சட்டப் பூர்வமாக இதை அணுகுமாறு கூறினார்கள்.
இதனை தொடர்ந்து எனது வழக்கறிஞர் மூலமாக அறிக்கை அனுப்பி உள்ளேன். அதற்கும்பதில் வரவில்லை என்றால் விஜய் தொலைக்காட்சி மீது மானநஷ்ட வழக்கு தொடர வேண்டிய சூழல் ஏற்படும்..
பின் குறிப்பு : ஒரு பிரபல வார இதழ்விஜய் தொலைக்காட்சியிடம் பேசிய பொழுது மட்டும்தான் இது குறித்து அவர்கள் பதில் அளித்தார்கள்.முதல் முறை ஒளிபரப்பபட்டதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் நாங்கள் மறுபடியும் செய்தோம், என்று அவர்கள் தரப்பினை நியாயப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு முறை அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்காக மறுபடியும் மறுபடியும் செய்து எல்லை மீறுவது எந்த விதத்தில் நியாயம்? இன்னொரு பதிலும் அளித்து இருக்கிறார்கள்.
நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன்பாக நாங்கள்“இந்த நிகழ்ச்சி யார்மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் ஒளிபரப்பபடவில்லை “என்று குறிப்பு போடுகிறாமேஎன்றார்கள். அப்படி பார்த்தால் குறிப்பை போட்டுவிட்டு யாரை வேண்டுமாலும்,எப்படி வேண்டுமானாலும் கிண்டல்செய்யலாம் என்று சொல்கிறார்களா? ஒரு தனி நபராக இருந்து கொண்டு தொலைக்காட்சி நிறுவனத்திடம் அதிலும் செல்வாக்கு மிகுந்த ஒருதொலைக்காட்சி நிறுவனத்திடம் போராடுவது கடினம்தான்.ஆனால்அதை பற்றியோ அல்லது இறுதி முடிவுகளை பற்றி நான் கவலைப்படவில்லை.என்னுடைய சுய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள நான் போராடுவேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Previous Post

சிவகார்த்திகேயன் படத்திற்கு சிக்கல் தீர்ந்தது!

Next Post

கணவரின் தயாரிப்பில் நடிக்கும் சிம்ரன்!

admin

admin

Related Posts

சசிகலாவுக்கு கொரானா தொற்று ! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
News

சசிகலாவுக்கு கொரானா தொற்று ! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

by admin
January 22, 2021
சீமானுடன் பார்த்திபன் பேசிய  ரகசியம்  என்ன?
News

சீமானுடன் பார்த்திபன் பேசிய ரகசியம் என்ன?

by admin
January 21, 2021
இயக்குநராக மாறுகிறார் ,தயாரிப்பாளர்.!
News

இயக்குநராக மாறுகிறார் ,தயாரிப்பாளர்.!

by admin
January 21, 2021
“தாராளமா  தர்மம் செய்தால் சாவித்திரி மாதிரிதான் சாகனும்!” -ஷகீலா புத்திமதி!
News

“தாராளமா தர்மம் செய்தால் சாவித்திரி மாதிரிதான் சாகனும்!” -ஷகீலா புத்திமதி!

by admin
January 21, 2021
ஷங்கர் -கேஜிஎப் யாஷ் இணைகிற பிரமாண்ட சரித்திர படம்.!
News

ஷங்கர் -கேஜிஎப் யாஷ் இணைகிற பிரமாண்ட சரித்திர படம்.!

by admin
January 21, 2021
Next Post
கணவரின் தயாரிப்பில் நடிக்கும் சிம்ரன்!

கணவரின் தயாரிப்பில் நடிக்கும் சிம்ரன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

சீமானுடன் பார்த்திபன் பேசிய  ரகசியம்  என்ன?

சீமானுடன் பார்த்திபன் பேசிய ரகசியம் என்ன?

January 21, 2021
இயக்குநராக மாறுகிறார் ,தயாரிப்பாளர்.!

இயக்குநராக மாறுகிறார் ,தயாரிப்பாளர்.!

January 21, 2021
“தாராளமா  தர்மம் செய்தால் சாவித்திரி மாதிரிதான் சாகனும்!” -ஷகீலா புத்திமதி!

“தாராளமா தர்மம் செய்தால் சாவித்திரி மாதிரிதான் சாகனும்!” -ஷகீலா புத்திமதி!

January 21, 2021
ஷங்கர் -கேஜிஎப் யாஷ் இணைகிற பிரமாண்ட சரித்திர படம்.!

ஷங்கர் -கேஜிஎப் யாஷ் இணைகிற பிரமாண்ட சரித்திர படம்.!

January 21, 2021

Actress

Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020
Chandini Tamilarasan New Photo Shoot

Chandini Tamilarasan New Photo Shoot

December 7, 2020
Actress Indhuja Photoshoot Stills

Actress Indhuja Photoshoot Stills

August 15, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani