காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதரின் சிலை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுத்து ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் குளத்தில் வைக்கப்படுவது வழக்கமாக வைக்கப்பட்டுள்ளது.அந்த வழக்கத்தின் படி,
கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அத்தி வரதர் 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சியளித்து வருகிறார்.
இந்த நிலையில் வரும் 17ஆம் தேதி மீண்டும் அத்திவரதர் குளத்தில் வைக்கப்படுவார் என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால், அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதாவுடன் இன்று அதிகாலை காஞ்சிபுரம் கோவிலுக்கு வந்து அத்திவரதருக்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார்.கோவிலில் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.