விஷால் -அனிஷா ரெட்டி நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் அமர்க்களமாக நடந்து முடிந்தது.
அதன் பிறகு துருக்கியில் நடந்த படப்பிடிப்புக்குக் கூட இருவரும் ஒன்றாக வந்தார்கள் என சொல்லப்பட்டது. அக்டோபரில் அவர்களது கல்யாணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கல்யாணம் நடக்காது என ஆந்திராவில் உள்ள பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள்.
அனிஷா ரெட்டியின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இருந்த இருவரது படங்களையும் எடுத்து விட்டாராம். எங்கேஜ்மென்ட் படங்களும் காணப்படவில்லை என்கிறார்கள்.