அஜித், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவான ‘வேதாளம்’ , கமல்ஹாசன், த்ரிஷா நடிப்பில் உருவான ‘துாங்காவனம்’ ஆகிய இரு படங்களும் வரும் நவம்பர் 10ல் அதாவது தீபாவளி அன்று ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் படத்திற்கு யு/ஏ சான்றிதழும், அஜித்தின் ‘வேதாளம்’ படத்திற்கு “யு” சான்றிதழும் கிடைத்துள்ளதால் தமிழக அரசின் வரி விலக்கு அஜித் படத்திற்கு கிடைத்துள்ளது. வரி விலக்கு என்பது படம் பார்க்கும் நபர்களுக்கு பயன் பட வேண்டும் என்றும், இதில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு எந்த வித சலுகையும் இல்லை என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் டிக்கெட்டின் விலை பெருமளவு குறையும் வாய்ப்பு உள்ளது. இதனால் வியாபார நோக்கம் கருதி ஏற்கனவே புக் செய்த துாங்காவனம் திரைப்படம் பெரிய தியேட்டர்களிலிருந்து சிறிய தியேட்டர்களுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் இதனால் கமல்ஹாசன் தரப்பினர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.