சிம்புவை வைத்து ‘கான்’ படத்தை எடுத்து வந்த இயக்குனர் செல்வராகவன். ஒருகட்டத்தில் பணச் சிக்கலில் மாட்டியதால் ‘இரண்டாம் உலகம்’ கதையாகிவிடப் போகிறதே என உஷாராகி, ”இனிமேல் படப்பிடிப்பு நடத்த முடியாது, படத்தை ட்ராப் செய்கிறோம்” என்று செல்வராகவன் அறிவித்தார். அதன் பிறகு அவர் தனுஷை வைத்து ஒரு படம் இயக்க போகிறார் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது வெளியான தகவல்படி, விஜய்சேதுபதி தான் செல்வராகவனின் அடுத்த பட ஹீரோ என்று நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘நானும் ரவுடி தான்’ நல்ல வரவேற்பை பெற்றதால், மீண்டும் விஜய்சேதுபதியின் இன்னொரு படத்தை தயாரிக்க போவதாக தனுஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார் .தற்போது அப் படத்தின் இயக்குனர் செல்வராகவன் தான் என தெரியவந்துள்ளது