அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்திற்கு ‘வெற்றி’ என்ற டைட்டில் வைக்கப்படலாம் என செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இந்த படத்தில் விஜய் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளதாகவும், அந்த கெட்டப்பின் புகைப்படம் எதுவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகவாறு படக்குழுவினர் மிக ஜாக்கிரதையாக இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. அனேகமாக விஜய் இந்த படத்தில் ஒருசில காட்சிகளில் மட்டும் பெரிய தாடியுடன் தோன்றுகிறார் என்கிறார்கள்!