கண்களும் ஒளியும்போலக்
கவின் மலர் வாசம்போலப்
பெண்களும் ஆண்கள் தாமும்
பெருந்தமிழ் நாடுதன்னில்.
தண்கடல் நிகர்த்த அன்பால்
சமானத்தர் ஆனார் என்ற
பண்வந்து காதிற்பாயப்
பருகுநாள் எந்தநாளோ?
பாவேந்தன் பாரதிதாசன் தமிழ் நாட்டுக்காகப் பாடிய பாடல்.
ஆணும் பெண்ணும் சமம் என்பதை வலியுறித்தி ஆர்வமிகுதியில் பாடிய பாடல்.
ஆண்களுக்கு நிகராக ஆடைகள் அணிவதில் மட்டுமே நிகராக வாழ்வதில் நாட்டம் கொள்கிறார்கள் என்பதை பாவேந்தனால் அன்று யூகிக்க முடியவில்லை. இன்னும் சொல்வதானால் குடிப்பதிலும் புகைப்பதிலும் சமமாக இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களால் சமூக கட்டுப்பாடுகளை உடைத்தெறிய முடியவில்லை.
மும்பை பெண்களால் முடிந்திருக்கிறது.
83 வயது மாமியார் இறந்து போனார். பொதுவாக மாமியார் என்பவர் மருமகள்களுக்கு எதிரியாகவே சித்தரிக்கப்படுகிற இந்த சமுதாயத்தில் கண்ணில் வைத்துப் போற்றிய மருமகள்களைப் பற்றிய ஓர் உண்மைப்பதிவு இது.!
உஷா,மனிஷா, லதா,மீனா இந்த நால்வரும் மருமகள்கள். மாமியாரின் சடலத்தை தாங்கள்தான் பாடையில் வைத்து தூக்கிச்செல்வோம் என அழுத்திச்சொல்லி சம்பிரதாயத்தை உடைத்திருக்கிறார்கள்.
யாரும் தூற்றவில்லை.மாறாக போற்றினார்கள்.
பெரியார்,அம்பேத்கர் ஆகிய செம்மல்களின் கருத்துகளை வடநாட்டில் பின்பற்றத் தொடங்கி இருக்கிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில்!?