சர்க்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் திரைப்படம் தர்பார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பை,மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
இவருடன்,நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அவ்வப்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் இரண்டு புகைப்படங்கள்ரஜினி காவல்துறை உடையில் ஜர்க்கின் அணிந்த நிலையிலும், மற்றொரு புகைப்படத்தில் காவல்துறை அலுவலகத்தின் பால்கனியில் நின்று வேடிக்கை பார்ப்பது போன்றும் வெளியானது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ரஜினிகாந்த் வெறும் பனியன் மட்டுமே அணிந்த நிலையில் ஆக்ரோஷமாக சண்டைக்கு தயாராகும் காட்சியின் புகைப்படம் வெளியாகி, இணையதள ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.