இயக்கியவர்கள்: ஸ்ரீ சித்,எல்.ரவி. ஒளிப்பதிவு : செல்வகுமார் .இசை :ரெஜிமன்
ஜித்தன் ரவி,சனுஜா,அனுநாயர் உள்ளிட்ட பலர்.
************
முற்பாதியில் பிக் பாஸ் போன்ற ரியால்டி ஷோவை நக்கலடித்து நைய்யப் புடைத்தவர்கள் காமடி என்கிற பெயரில் ஆபாசங்களையும் அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.
பிற்பாதியில் பலிக்குப் பலி என கதை விட்டிருக்கிறார்கள்.
பல இயக்குநர்களை உருவாக்கியவர் ஆர்.பி.சவுத்ரி. குடும்பமுடன் தியேட்டருக்குப் போய்ப் பார்க்கக்கூடிய படங்களை தயாரித்த புகழுக்குரியவர் .மகனுக்கு அறிவுரை சொல்ல மாட்டாரா?
இவரது பிள்ளை ஜித்தன் ரமேஷ் .
ரிப்போர்ட்டர் டி.வி .யின் உரிமையாளர் மனோபாலா. இவர் டி.ஆர்.பி.ரேட் எகிறுவதற்காக ஒரு பேய் பங்களாவில் ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலரை அடைத்து வைத்து ரியால்டி ஷோ நடத்துகிறார். அதில்தான் எல்லா அசிங்கமும் இரண்டு கொலையும் நடக்கிறது.அதற்கு ஜித்தன் ரமேஷின் மன வியாதியும் ஒரு காரணம் என பின்னாடி கதை விடுகிறார்கள்.
கஸ்தூரியை நக்கல் அடித்திருக்கிறார்கள்.அதற்கு அவரது ரீ ஆக்ஷன் கமென்ட் கிடைத்தால் அதையும் புரமொஷனுக்கு பயன்படுத்தலாம் என்கிற ஐடியாவோ என்னவோ!
தலைப்பு என்னவோ ‘உங்களை போடனும் சார்’ ஆனால் போட்டுப் பார்ப்பது என்னவோ நம்மைத்தான்.! பின்னணி இசை இரைச்சலிலேயே தூக்கம் கெட்டுப்போகும் .நல்ல உத்தி.
சினிமா முரசத்தின் மார்க். ?