மலையாள நடிகர் மோகன்லாலின் வீட்டில் கடந்த 2012ஆம் ஆண்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 4 யானைத் தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.மோகன்லால் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பரபரப்பாக பேசப்பட்ட இவ்விவகாரம்,மற்றும் அவர் மீதான வழக்கு திடீரென கைவிடப்பட்டது.
இதற்கு பின்னால் அப்போதைய ஆளும்கட்சி இருந்ததாக பேசப்பட்டது.இந்நிலையில் மோகன்லாலுக்கு எதிராக திடீர் என கேரள உயர்நீதிமன்றத்தில் மீண்டும் யானைத்தந்தங்கள் தொடர்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.அவ்வழக்கில் வன உயிர் பாதுகாப்புச் சட்டப்பிரிவின்படி தந்தங்களை ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து கேரள பெரும்பாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இவ்விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.