ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் (நாங்குநேரி,விக்கிரவாண்டி) இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது.என மக்கள் நீதி மையத்தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இது குறித்து கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வணக்கம்!,
பழைய கொள்ளையர் கட்சிகளையும், அதன் கூட்டுப் பங்காளிகளையும், பெருவாரி மக்களின் எண்ணப்படி ஆட்சியிலிருந்து அகற்றி, 2021-ல் ஆட்சிப் பொறுப்பினை மக்கள் பேராதரவுடன் கைப்பற்றி, மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு, மக்கள் நீதி மய்யம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது.
நாங்குநேரியுலும், விக்கிரவாண்டியிலும், தங்கள் தலைவர்களையும் அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்கவைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்துடன், ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மையம் பங்கேற்காது. நாளை நமதே இவ்வாறு கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்