ஆயுஸ்மான் குரானா .பாலிவுட் நடிகர்.இவரது மனைவி தாகிர் கஷ்யப்..இருவரும் திரை உலகை சேர்ந்தவர்கள்.காதல் திருமணம்.
கணவன் நடிகர், மனைவி தயாரிப்பாளர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்,ஆண் ஒன்று பெண் ஒன்று.!
மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் பேரிடியாக இறங்கியது அந்த சேதி!
மனைவிக்கு மார்பக புற்று நோய் .எப்படி தாங்க முடியும்? மன அழுத்தம் கஷ்யப்பை கடுமையாக பாதித்தது..
நவீன சிகிச்சைகள் வழியாக குணப்படுத்த முடியும் என்றாலும் கேன்சர் என்ற சொல்லே மனிதனை உருக்கி விடுமல்லவா!.
“குரானா படப்பிடிப்புக்குச்சென்று விட்டால் இரவு முழுவதும் அழுது கொண்டு இருப்பேன். பகலில் வழக்கம் போல சகஜமாக இருந்தேன். என்னால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது.அவர் கவலையில் ஆழ்ந்து விட்டால் நடிப்பில் கவனம் போகாது. அதனால் இப்படி இரட்டை வாழ்க்கை வாழ்ந்தேன்.
இப்போது சிகிச்சை பலனளித்து வருகிறது .தினமும் புத்தர் வழிபாடு எனது மன வலிக்கு மந்திரமாக இருக்கிறது.ஆறுதலுடன் இருக்கிறேன் ” என்கிறார் கஷ்யப்.