நம்மாளுங்க எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க தெரியுமா?
படுகாலிப் பயலுங்க.! நல்ல காரியத்துக்காக செஞ்சா பரவாயில்ல. நாச காரியத்துக்காகள்ல பண்றானுங்க.
இந்தாளு மண்டைய பாத்திங்களா ?சூப்பரா என்னமா ஸ்டைல் ?எப்படி தலை வாரி அழகா இருக்கு.!
அதுக்குள்ளே ஒன்னரை கிலோ தங்கம் இருக்குங்க.!
ஆச்சரியமா இருக்கா , மண்டைய வட்டமா செரைச்சு அதுமேல தங்கத்தை பேஸ்ட் வடிவத்தில உருக்கி மெட்டல் டிடக்டருக்கு மாட்டாம இருக்க விஞ்ஞான முறையில செஞ்சு ஒட்டிட்டான்.அதுக்கு மேல விக் செஞ்சு கரெக்டா மாட்டிட்டான்.ஜார்ஸாவிலேர்ந்து ஜம்ன்னு கேரளா வந்து இறங்கிட்டான்.
நம்ம கஸ்டம்சுக்கு எப்படியோ சந்தேகம் வந்து ஆளை விசாரிச்சு மண்டைய பிடிச்சு ஆட்டுனப்ப விக் கையோடு வந்திருச்சி.
சம்ஷத் மாட்டிக்கிட்டான்.!