நடிகை பூஜா தலைப்பிரசவம் : தாயும் சேயும் மரணம்.

மரணம் என்பது எந்த வடிவில் ,எந்த நொடியில் வரும் என்பது தெரியாது.

 நடிகை பூஜா சாவந்தின் கதை மிகவும் சோகமானது.

மராத்திய திரை உலகில் பிரபலமாக விளங்கியவர் பூஜா. வயது 25. இளம் வயதிலேயே கல்யாணம் செய்து கொண்டார்.

நிறைமாத கர்ப்பிணி .மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன் தினம் பிரசவ வலி. அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்கள். 

குழந்தை பிறந்தது. சற்று நேரத்தில் அது மடிந்து விட்டது. 

குழந்தையின் முகம் கூட பார்க்க முடியாத நிலையில் பூஜாவுக்கும் உடல் நலம் மோசமானது. 

ஹிங்கோலி சிவில் ஹெல்த் சென்டருக்கு உடனே கொண்டு செல்லும்படி  மருத்துவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆனால் ஆம்புலன்ஸ் கிடைக்க வில்லை. ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பின்னர் வந்த ஆம்புலன்ஸ் நடிகையை எடுத்துச்சென்றது.

ஆனால் வழியிலேயே அவர் மரணித்து விட்டார். சீக்கிரமாக கொண்டு வந்திருந்தால் தாயையாவது காப்பாற்றி இருக்கலாம் என்றார்களாம் மருத்துவர்கள்.

விதி கொடியது மக்களே!