
விடிந்து எழுந்தால் வேதனைகளைத்தான் விழுங்க வேண்டியதிருக்கிறது.
எதிர்காலம் என்னவாகுமோ என்கிற பயம் படித்து வெளியேறும் பட்டதாரிகளிடம்!
எம்பிளாய்மென்ட் எக்சேஞ்ச் என்பது பெயர்களை மட்டுமே பதிவு செய்து கொள்கிற வெறும் அலுவலமாக மாறி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் கடந்த ஆறு ஆண்டுகளில் 90 லட்சம் பேர் வேலைகளை இழந்திருக்கிறார்கள்.
இதுதான் பாரதீய ஜனதா கட்சியின் பிரமாண்டமான சாதனை.
2011-12 ஆம் ஆண்டுகளில் 47.4 கோடி பேர் வேலை வாய்ப்பு பெற்றிருந்தனர்.
2017-18-ல் அது சடேரென 46.5 கோடியாக சரிந்து விட்டது.
தற்போது சராசரியாக ஒவ்வொரு வருசமும் 26 லட்சம் பேர் வேலைகளை இழந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த சாதனை போதுமா ?












