இடையில் இருப்பது இரண்டே நாள்…!
உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள், தந்தை சீனிவாசனின் நினைவு நாள் நவம்பர் 7 ஆம் தேதி.
அன்று கமல் பிறந்த ஊரான பரமக்குடியில் தந்தைக்கு சிலை திறப்பு.
மறுநாள் 8 ஆம் தேதி குரு கே.பாலசந்தருக்கு சிலை.
9 ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ .பெருந்திடலில் கமல்ஹாசனின் உங்கள் நான் இசை நிகழ்ச்சி. இசைஞானியும் ,எஸ் .பி.பாலசுப்பிரமணியமும் இணைந்து நடத்துகிற இன்னிசை நிகழ்ச்சி.
ஆனால் அன்றைய தினம் பேய் மழை பெய்யலாம், பெருங்காற்று வீசலாம் என வானிலை நிலையம் அறிவித்திருப்பதால் நவ.17 ஆம் தேதிக்கு தள்ளி வைக்க திட்டம். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்தலாம் என்கிற ஐடியாவும் இருக்கிறது.
ஆனால் அதிமுக மந்திரிகளுக்கு கமல்ஹாசன் வேண்டாத விருந்தாளி.