சுசி லீக்ஸ் என்று கோலிவுட் பிரபலங்கள்,டிவி தொகுப்பாளினிகளின் ரகசியப் படங்களை வெளியிட்டவர் பின்னணிப் பாடகி சுசித்ரா.டிவிட்டரில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது.
சுசித்ராவின் கணவர் நடிகர் கார்த்திக் குமார் சிறிது காலம் மனைவிக்காக படாதபாடு பட்டார். ஒரு கட்டத்தில் சுசிக்கு மனநலம் சரியில்லை என்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு வெளிநாடு போய்விட்டார் என்கிறார்கள். பாடுகிற தொழிலும் அவ்வளவு சிறப்பாக சுசிக்கு அமையவில்லை. பிறகு அவரைப் பற்றிய தகவல் எதுவும் வரவில்லை. விவாகரத்து ஆகி விட்டதாக சொன்னார்கள்.
திங்கட்கிழமையில் இருந்து சுசியை காணவில்லை என்பதாக அவரது சகோதரி சுனிதா போலீசிஸில் புகார் செய்திருந்தார். அடையார் ஹோட்டலில் இருப்பதாக தகவல் கிடைத்தது. சுசிக்கும் அவரது சகோதரிக்கும் என்ன பிரச்னையோ மோதிக் கொண்டு இருக்கிறார்கள்.