ரஜினி முதல்வரா? கமல் முதல்வரா? – ரஜினியின் சூசக பேச்சு!

கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி ‘உங்கள் நான்’ என்ற நிகழ்ச்சி  சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ,ர ஜினிகாந்த்,  எஸ்.பி.முத்துராமன்,  மணிரத்னம், ஷங்கர்,  கே.எஸ்.ரவிக்குமார், சேரன், அமீர் , விஜய் சேதுபதி, கார்த்தி, வடிவேலு, ஜெயம் ரவி, தமன்னா,  மனிஷா கொய்ராலா, உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

இந்த விழாவில்  ரஜினிகாந்த்  பேசும் போது,

எனது நண்பரும் கலையுலக அண்ணனுமான கமலுக்கு என் வாழ்த்துகள். நடிப்பது இயக்குவது, கதை எழுதுவது, பாடல்கள் எழுதுவது, பாடுவது, ஒரே படத்தில் பத்து விதமான கதாபாத்திரங்களில் நடிப்பது என எல்லாவற்றிலும் சிறப்பாக செய்து காட்டியவர் ஒரே நபர் கமல் தான்! அதனால் தான் அவர் ‘உலகநாயகன்’. 60 ஆண்டுகால கலைப்பயணம் சாதரனது அல்ல. ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்தி வருபவர்.  43 ஆண்டுகள் திரையுலகில் நான் அவருடன் பயணத்து வருவது அதிசயம்.

எடப்பாடி. பழனிசாமி தமிழக  முதலமைச்சராவோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அவர் முதலமைச்சர் ஆனவுடன் அவருடைய  ஆட்சி 20 நாட்கள் கூட தாங்காது. கவிழ்ந்து விடும் என்றார்கள்அதிசயம் நடந்தது ஆட்சி கவிழவில்லை. எல்லா தடைகளையும் தாண்டி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

நேற்று அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம், அற்புதம் நடக்கிறது. நாளைக்கும் அதிசயம், அற்புதம் நடக்கும். எனக்கும் கமலுக்கும் இடையே உள்ள நட்பை யாராலும் பிரிக்க முடியாது. அரசியலில் எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சண்டையிட்டுக் கொள்ளமாட்டோம்’. என பேசினார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் சொன்ன அதிசயம், அற்புதம் நடந்தால்..  ரஜினி முதல்வரா?  கமல் முதல்வரா?