
காயத்ரி ரகுராமும், டுவிட்டரில் விமர்சித்தார்.
குறிப்பாக திருமாவளவன் பேசிய வீடியோவை பதிவிட்டு,”ஹிந்துக்கள் இனியும் இவர்களை போன்றவர்களுக்கு இனி வாக்களிக்க மாட்டார்கள்” என பதிவிட்டதுடன் நின்றிருந்தால் பரவாயில்லை.
” இந்த நபரை எங்கு கண்டாலும் இந்துக்கள் செருப்பால் அடிக்கணும்”என வன்முறைக்கு வழி காட்டியிருந்தார்.
“நான் இந்துகளுக்கு எதிரானவன் அல்ல” – என்கிற திருமாவளவனின்,விளக்கத்திற்கு,”சி
திருமாவளவனின் ஆதரவாளர்கள், காயத்ரி ரகுராமின் உதவியாளரை போனில் தொடர்பு கொண்டு கண்டிக்க தொடங்கினர்.சிலர் அநாகரீக கருத்துக்களையும் கூறினர்.இவை எல்லாவற்றுக்கும் அவரும் பதில் தந்ததோடு, இதை அனைத்தையும் டுவிட்டரில் நேரலையாக பதிவிட்டார்.
இதற்கிடையே காயத்ரியின் வீட்டை வி.சி.,யை சேர்ந்த ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள காயத்ரி ரகுராம் “மூளையற்றவர்கள் நீங்கள்! ,நான் சென்னையில் இல்லை,வீணாக நேரத்தை வீணடிக்காதீர்கள் உங்கள் , திருமாவளவனை இந்துக்களிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள்.”என சாடியிருந்தார்.
‛‛நவ., 27ல் மெரினா கடற்கரையில் காலை 10 மணிக்கு நான் வருகிறேன்.தைரியம் இருந்தால் நேரில் வந்து என்னை மிரட்டுங்கள்.திருமாவளவனுக்கு சவால் விடுகிறேன்”, என காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.
வன்முறைக்கு வித்திடுகிறார்கள் .. இதெல்லாம் கேவலமான அரசியல் என்பதை தலைமை சொல்லுமா?