‘ பாகுபலி’ படத்தை தொடர்ந்து ராஜமெளலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம், ஒரு சுதந்திர போராட்ட வீரர் குறித்த கதை தான். அல்லூரி சீத்தாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோர் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர தாகத்துடன் எப்படி வீரப்போர் புரிந்தார்கள் என்பது தான் படத்தின் கதை.
இதில்,ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்து வருகின்றனர். இதில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்து வருகிறார்.
ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்து இருந்தார்.ஆனால், திடீரென அவர் படத்தில் இருந்து விலகினார்.இந்நிலையில்,லண்டன் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஒலிவியா மோரிஸை ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக கமிட் செய்துள்ளார் இயக்குனர் ராஜமௌலி.
ஒலிவியா மோரிஸ் இப்படத்தில் ஜெனிஃபர் எனும் இங்கிலாந்து பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.மேலும்,இப்படத்தில் தோர், ரோம், ரெலிக் போன்ற பிரபல ஹாலிவுட் படத்தில் நடித்த ரே ஸ்டீவன்ஸன் ஆர்.ஆர்.ஆர். படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
ஜேம்ஸ் பாண்டின் வியூ டு கில், இண்டியானா ஜோன்ஸ் படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை ஆலிசன் டூடியும் இந்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.