வைபவ் – வெங்கட்பிரபு கூட்டணியின் “லாக்கப்”

நடிகர் நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் கதாநாயகனாகவும், வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் “லாக்கப்”.  

இயக்குனர் மோகன்ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.ஜி. சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

மேலும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ்,  பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

வைபவ் – வெங்கட்பிரபு கூட்டணி முதல் முறையாக முற்றிலும் மாறுப்பட்ட சீரியஸான கதாபாத்திரத்தில் “லாக்கப்” திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் வெளியான “லாக்கப்” படத்தின் டீசர்  10 லட்சத்திற்க்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டது.