மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியிலும் ஏ.எல் விஜய் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார்.சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.
இயக்குனர் கவுதம் மேனனும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப்சீரிஸாக எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். இயக்குனர் பிரியதர்ஷினியும் தி அயர்ன் லேடி என்ற பெயரில் ஜெயலலிதாவின் வரலாற்றை படமாக எடுத்து வருகிறார்.
இந்நிலையில், தன் அனுமதியில்லாமல்எடுக்கப்படும் தலைவி படத்துக்கும் , இணையதள தொடருக்கும் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படங்கள் எடுக்க தடை விதிக்க உரிமையியல் வழக்கு தொடர ஜெ.தீபாவிற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.