![]() ![]() |
|||
|
வெங்கட் மூவிஸ் புரொடக்சன் வழங்கும் படம் தண்டுபாளையம். இப்படத்தை கே.டி .நாயக் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பலபுள்ளிகள் கலந்து கொண்டு பேசினார்கள். வழக்கம் போல புகழ் மாலைகள் காய்ந்து கருகும் வரை பன்னீர் தெளித்துப் பேசினார்கள்.பன்னீர் வெந்நீர் ஆகிவிடும் அளவுக்கு பேசுவதற்கு கோலிவுட்டில் ஆட்கள் உண்டு.
நடிகை சுமன் ரங்கநாத் மாநகர காவலில் நடித்தவர் .நெடிய இடைவெளிக்கு பிறகு வனப்பு குறையாமல் வந்திருந்தார். அவர் பேசியதாவது,
“என்னோட முதல்படம் புதுப்பாட்டு. சென்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்குள்ள சாப்பாடு, இங்குள்ள கலாச்சாரம் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ( வெரி குட்.) அம்மா அப்பா இங்குள்ள படங்கள் எல்லாம் பார்ப்பாங்க. ( நீங்க பார்க்க மாட்டீங்களா?) இந்தப்படத்தில் நடிக்க கேட்டதும் உடனே சம்மதித்தேன். ஏன்னா இந்தக்கேரக்டர் ரொம்ப சேலன்ச்சிங்காக இருந்தது.