தலைவி படத்தில் சசிகலாவாக மதுபாலா!
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் இயக்கி வருகிறார். இதில் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான தலைவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவரது பிராஸ்தடிக் மேக்கப் ஜெயலலிதா போன்றே இல்லை என சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இது படக்குழுவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப் படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரியாமணி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா வேடத்தில் கங்கணா நடிப்பதையே ஜீரணிக்க முடியவில்லை.இதுல, ‘சசிகலா கேரக்டருக்கு பிரியாமணியா, செட்டே ஆக மாட்டார். என வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து தலைவி படத் தரப்பினரிடம் விசாரிக்கையில்,சசிகலா கதாபாத்திரத்திற்கு பிரியாமணின்னு யார் சொன்னது.ரோஜா மதுபாலா தான் சசிகலாவா நடிக்கிறாங்க என்கின்றனர் சத்தியம் செய்யாத குறையாக. கத்தரிக்கா முத்துனா கடைத் தெருவுக்கு வந்து தானே ஆகணும். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.