ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தற்போது நடந்து வருகிறது. ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில், ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இசைவெளியீட்டு விழாவின் போது லைகா நிறுவனத்தின்சிறப்பு வீடியோ ஒன்று திரையிடப்பட்டது. அதில்விஜய் நடிப்பில் வெளியான கத்தி, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 ஆகிய திரைப்படங்கலில் சில காட்சிகள் இடம் பெற்று இருந்தது.
இவ்விழாவில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பேசியபோது,”நிலாவை பார்த்து சாப்பிட்ட நாம் நிலவில் இறங்கினால் எப்படி மகிழ்ச்சியாக இருக்குமோ அதுபோன்ற ஒரு மகிழ்ச்சி இப்போது இருக்கிறது. உங்கள் எல்லாரையும் விட நான் தான் ரஜினிகாந்தின் மூத்த ரசிகன். எம்.ஜி.ஆர்க்கு பிறகு ரஜினி என்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர்க்கும் ரஜினிக்கும் நிறைய வேறுபாடு இருக்கும். இப்போதிருக்கும் நடிகர்கள் அனைவருக்கும் ரஜினிகாந்தின் சாயல் கட்டாயம் இருக்கிறது” என்றார்.
நிகழ்ச்சியில் அனிருத் பேசியதாவது,” எனக்கு இதுமிகவும் சிறப்பான நாள்.”இங்கே என்னோட ஃபேன்ஸ்என யாரும் இல்ல இங்க எல்லோரும் சூப்பர்ஸ்டார் ஃபேன்ஸ் தான் . ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழா, எனக்கு ஸ்பெஷலான எமோஷனலான நிகழ்வு. தலைவர் படத்துக்கு இசையமைப்பது என்பது என்னோட வாழ்நாள் கனவு. தற்போது அது இரண்டாவது முறை நிகழ்ந்துள்ளது.நான் முதன் முதலில் தியேட்டரில் பார்த்த படம் ‘அண்ணாமலை’. ‘தர்பார்’ படம் பொங்கலுக்கு ஒரு செம டிரீட்டாா தான் இருக்கும். ஒண்ணே ஒன்னு தான் இங்கே நான் சொல்லணும் அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான் ” இவ்வாறு அவர் பேசினார்.