என்னையும், என் குழந்தையையும் காயப்படுத்துவதை நிறுத்து? அருண் விஜய்யிடம் குமுறிய வனிதா!
நடிகை வனிதாவின் திருமணம் மற்றும் விவாகரத்து,மறுமணம் அதைத் தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் பிரச்சனை என போலீஸ் கமிஷனர் அலுவலகம் வரை சென்றவர். இதனால் வனிதா மீது அவரது குடும்பத்தினர் யாரும் பேசுவதில்லை.
குடும்ப நிகழ்ச்சி எதற்கும் அவரை அழைப்பதுமில்லை.சமீபத்தில் கலந்து கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட, சக போட்டியாளர்களால் ‘வத்திக்குச்சி’ வனிதா என அழைக்கப்பட்டவர். இந்நிகழ்ச்சிக்கு பின் எல்லாவற்றையும் மறந்து தன குடும்பத்தினர் தன்னை மீண்டும் சேர்த்து கொள்வார்கள் என தான் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
(பழையபடம்)
இந்நிலையில் தனது அண்ணன் நடிகர் அருண் விஜய் மற்றும் தனது குடும்பத்தினரை கடுமையாக தாக்கி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது,”உண்மையான ஹீரோ, சொந்த தங்கையை காயப்படுத்தவும் மாட்டான், ஏமாற்றவும் மாட்டான். உன்னாலும், எனது தங்கைகளாலும் நான் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டுவருகிறேன்.
(பழையபடம்)
இந்த பிரச்சனையை பேசித்தீர்க்கும் அளவுக்கு நீ முதிர்ச்சியானவன். நானும் உங்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும். அவமதிக்கப்படக்கூடாது. என்னையும் என் குழந்தையையும் காயப்படுத்துவதை முதலில் நிறுத்துங்கள்.என் அம்மாவின் சொத்தில் வாழ்கிறேன். நான் ஒதுக்கப்படுகிறேன், ஏமாற்றப்படுகிறேன்,என் குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்? இதையெல்லாம் அனுபவித்து கொண்டு, எல்லாவற்றையும் நான் ஒரே ஆளாக கடந்துவருகிறேன். கடவுள் எப்போதும் என் பக்கம் இருக்கிறார்.
(கோப்பு படம்)
எனது குடும்பத்தினரால் என்னுடைய சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறேன் . நான் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.. சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு எளிதாக வீடு வாடகைக்கு கிடைக்காது.
மூன்று குழந்தைகளுக்கு தாயான எனக்கு அது சங்கடமாகவும் அவமானமாகவும் உள்ளது. இரண்டு மகள்கள் உள்ளனர், என் குடும்பத்தினரால்தான் நான் பிரச்சனைகளை எதிர்கொள்கிறேன். ஆனால்,அருண்விஜய்யும் என் சகோதரிகளும் சந்தோஷமாக இருக்காங்க . இவ்வாறு அவர் ஏகத்துக்கும் குமுறியுள்ளார்.

