நடிகர்களுக்கு முதுகெலும்பே இல்லை.!-கங்கனா ரனாவத் கடும் தாக்கு!!
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் வலுத்து வருகின்றன. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை, தடியடி நடத்தினர். எனவே, மாணவர்கள் போராட்டம் நாடு முழுக்க பரவியுள்ளது.ஆனால்,பிரியங்கா சோப்ரா,ஹ்ரித்திக் ரோஷன்,விக்கிகவுசல்,தியா மிஸ்ரா உள்ளிட்ட ஒருசில நடிகர் நடிகைகளைத்தவிர மற்ற யாரும் இது குறித்து வாய் திறக்காமல் மவுனம் சாதித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த்,””எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒருவழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என தனது டுவிட்டரில்பதிவிட்டிருந்தார்.
அதேசமயம்,இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கமல்ஹாசன்,கரம் கோர்த்து தலை முழுகுவோம் இவர்களை. தாய் திருநாட்டின் இப்பிணிகளை. தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் இது.என தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.மேலும், இந்திய அரசியலமைப்பின் சட்ட பிரிவு 14க்கு எதிராக இந்த சட்டம் இருக்கிறது என்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பாக வழக்கும் தொடுத்தது.
இந்நிலையில், ஏ. எல். விஜய் இயக்கத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் பத்திரிகையாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், “குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பாலிவுட் முன்னனி நடிகர்கள் வாயை திறக்காமல் இருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயமாகும், கோழைகள். முதுகெலும்பே இல்லாதவர்கள்.
மக்களால் தான் உருவானோம் என்று அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். மக்களுக்காக குரல் கொடுக்க பயந்தால் அவர்கள் அந்த இடத்தில் இருப்பதற்கே தகுதியற்றவர்கள் . இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது மட்டுமே அவர்களது வேலையில்லை மக்களுக்காக தங்களது கருத்தையம் தைரியமாக சொல்ல முன்வர வேண்டும்” என ஆவேசத்துடன் கூறியுள்ளார்.