எங்களுக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் போராட்டமாகவே உள்ளது. நீரிழிவு நோயும் உள்ளது. உடல்நிலையில் பிரச்னை ஏதும் ஏற்பட்டு விடுமா? சொந்த வீடு எப்போது அமையும்? என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்?
– வாசகி, பண்ருட்டி
உங்களுக்கு விருச்சிக லக்னம், மகர ராசி. தற்சமயம் சனிபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு உங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாகும். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் சொந்த வீடு பாக்கியம் உண்டாகும். உங்கள் கணவருக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி. சுக ஸ்தானத்தில் பாக்கியாதிபதி உச்சம் பெற்றிருக்கிறார். இருவருக்கும் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு அனுகூலமான காலகட்டங்கள் மாறுகின்றன. 2021 -ஆம் ஆண்டு சொந்த வீடு கட்டுவீர்கள். எதிர்காலம் சிறப்பாக அமையும்.