கடந்த ஆண்டு யுவன்சங்கர் ராஜாவின் இசையில் வெளியான சூர்யாவின் என்.ஜி.கே படத்தில் சித்ஸ்ரீராம்,ஸ்ரேயாகோஷல் ஆகியோர் பாடிய “அன்பே அன்பே பேரன்பே’ என்ற பாடல் 50 மில்லியன்களை கடந்து யூடியூபில் மிகப்பெரிய ஹிட் ஆனது.இந்நிலையில்,ஸ்ரேயா கோஷல் மீண்டும் யுவன் கூட்டணியில் புதிய பாடல் ஒன்றை பாடியுள்ளாராம்.
பாடல் பதிவின் போது யுவனுடன் இருக்கும் புகைப்படத்தை ஸ்ரேயாகோஷல் தனது டுவிட்டரில் பதிவிட்டு, மீண்டும் ஒரு படத்திற்காக இந்த வருடம் உங்களுடன் இணைவது மிகவும் பெருமையாக உள்ளதுஎன்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரேயாவின் இந்த டுவிட்டுக்கு யுவனும்,எப்போதும் போல இந்த முறையும் உங்களது குரல் அமேஜிங்காக இருந்தது.என பதிவிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்த ட்வீட்டை பார்த்தவுடன் அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் வலிமை? படத்திற்கான பாடலா? என கேட்டு வருகின்றனர். ஆனால், எந்த படத்திற்கு என்ற பதிலை யுவன்மற்றும் ஸ்ரேயாகோஷல் இருவரும் இதுவரை அறிவிக்கவில்லை.