டி.வி. நடிகை ஜெயஸ்ரீ. இவரது கணவர் ஈஸ்வர். இவரும் சின்னத்திரையில் நடிகராக உள்ளார். ராஜா ராணி, கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். தேவதையை கண்டேன் என்ற சீரியலில் நடித்து வந்த இவர், தன்னுடன் நடித்த மகாலட்சுமியுடனும் நெருக்கமானதாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.மேலும் நடிகர் ஈஸ்வர், குடித்து விட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், மகாலட்சுமி என்ற அந்த நடிகையை திருமணம் செய்து கொள்வதற்காகவே தன்னையும், தன் மகளையும் கொடுமைப்படுத்துவதாகவும், மேலும்,தன்னிடம் இருந்த ரூ.30 லட்சம் பணத்தையும் அபகரித்துக் கொண்டார் என்றும் ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்தார். இவ்விவகாரம் தொடர்பாக ஈஸ்வர் கைதாகி, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இவ்விவகாரங்களால் மன உளைச்சலில் இருந்த ஜெயஸ்ரீ, தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளார். அவரை மீட்ட பெற்றோர்கள், மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்கொலை முயற்சிக்கு முன்னதாக ஜெய்ஸ்ரீ தனது தற்கொலை குறித்து தோழிக்கு அனுப்பியுள்ள ஆடியோ பதிவு ஓன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச் சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.