கோமாளி படத்தை தொடர்ந்து பூமி,ஜனகனமன மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
இந்த நிலையில் ஜெயம் ரவி நடித்து வந்த ’பூமி’ என்ற திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் வரும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளதாக ஜெயம் ரவி தனது சமூக வலை பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் தற்போது இப் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார்.