இந்தி திரைப்பட உலகின் பழம்பெரும் நடிகை ஷபானா ஆஸ்மி.(இவருக்கு வயது 69).இவர் மஸூம், அமர் அக்பர் அந்தோனி, அன்கூர், நிஷாந்த், அர்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-புனே விரைவு சாலையில் அதாவது,மும்பையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள காலாப்பூர் அருகே இன்று மாலை 3.30 மணியளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் எதிர்பாராதவிதமாக , நின்று கொண்டிருந்த லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது.
இதில் அவர் படுகாயமடைந்தார்.அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் நடிகை ஷபானா ஆஸ்மி நவி மும்பையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிக்சை அளித்து வருகின்றனர்.
அவருடன் சென்ற ஷபானா ஆஸ்மியின் கணவர் ஜாவேத் அக்தருக்கு பெரிய அளவில் காயங்கள் ஏதுமின்றி தப்பித்துள்ளார்.
இந்நிலையில், இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி சாலை விபத்தில் காயமடைந்ததை கேள்விப்பட்ட பிரதமர் மோடி, விரைவில் அவர் குணமடைய வேண்டும் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.