தென் அமெரிக்காவில் உள்ள பராகுவே நாட்டில் பெட்ரொ ஜுயன் கபரிரோ என்ற நகரில் ஒரு சிறைச்சாலை உள்ளது.இதில்,கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த சிறைச்சாலைக்குள்ளேயே சுரங்கம் அமைத்து கைதிகள் 76 பேர் (40 பிரேசில் நாட்டினர், 36 பராகுவே நாட்டினர்) தப்பிச்சென்றுள்ளனர். தப்பிச்சென்ற அனைவரும் பிரேசில் மற்றும் பராகுவே நாட்டில் போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றச்செயல்களில் ஈடுபட்ட மிகவும் அபாயகரமானவர்கள் என அந்நாட்டு போலீ ஸாரால் அறிவிக்கப்பட்டவர்கள்.
இதையடுத்து,சம்பந்தப்பட்ட சிறை கண்காணிப்பாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு சிறைக்காவலர்கள் சிலரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.