சென்னை சேப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், ரஜினிகாந்த், ‘துக்ளக்’ விழாவில் பெரியார் பற்றிய சர்சை கருத்து பேசியது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியதாவது,
“துக்ளக் விழாவில் பெரியார் பற்றிய விமர்சனத்தை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்திருக்க வேண்டும்”நடிகர் ரஜினிகாந்த் நடித்த 16 வயதினிலே படத்தில் இடம்பெறும், “பத்தவச்சிட்டியே பரட்ட” என்ற வசனத்தைப் போல, தற்போது ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசிய கருத்து பற்றி எரிகிறது.ரஜினி பழைய கருத்துக்களை பேசி பிரச்சினையை எழுப்பக்கூடாது , எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்று ஆக்கப்பூர்வமாக பேசவேண்டும்” என்றும் அவர் கூறினார்.












