ஆஸ்கார் வாங்கி வந்த இந்தியர் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
பொதுவாக இசை அமைப்பாளர்கள் தங்களது இசைப் படைப்புகளுக்கு முழுமையான காப்புரிமை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
அந்த உரிமையை படத்தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து விட்டால் சம்பந்தப்படட இசைப்படைப்புகளுக்கு வரி விலக்கு உண்டு..
ஏ ஆர் ரகுமான் தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக படைப்பாளர்களுக்கு கொடுத்து விடுவார்.
ஆனாலும் சேவை வரி கட்ட வேண்டும் என்று ஜி.எஸ்.டி .வரி ஆணையர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.வந்தே மாதரம் பாடியவர்க்கு வந்த சோதனையைப் பாருங்கள்.
இதற்காக நீதியின் உதவியை நாடிய ரகுமானுக்கு சட்டம் ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறது. இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.