
பிரபல ஒளிப்பதிவாளர்பி.ஜி .முத்தையா-எம்..தீபா தயாரித்துள்ள படம் ‘காக்டெய்ல்’ .
.விஜயமுருகன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் யோகிபாபு, ரமேஷ், மிதுன், பாலா, குரேஷி, சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் சாய் பாஸ்கர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் நடைபெற்றது.
எஸ்.வி.சேகர், நமீதா, அசோக் செல்வன், ஆடுகளம் முருகதாஸ், கருணாகரன், மைம் கோபி, எஸ்ஜிசி சினிமாஸ் மணிகண்டன் மற்றும் கனகராஜ், ராஜா, முகேஷ் பிலிம்ஸ் நிறுவனர் முகேஷ், லகரி ஆடியோ முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தயாரிப்பாளர் முத்தையா பேசுகையில் , “சினிமா பற்றிய எந்த விஷயங்களும் தெரியாமல் தான் சென்னைக்கு வந்தேன்.. எஸ்ஆர்எம் கல்லூரி சேர்ந்து படித்தபோதுதான் சினிமா என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன்.. டிவி கூட இல்லாத வீட்டிலிருந்து வந்த நான், இன்று இந்த இடத்தில் நிற்கிறேன் என்றால் இது அனைத்தையுமே எனக்குத் தந்தது எஸ்ஆர்எம் கல்லூரி தான்” என்றார்.
இந்தப்படத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘காக்டெய்ல்’ என்கிற பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை..