இனிமேல் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டால், அதற்கான முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும். கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்என நடிகர் கமல்ஹாசன் லைகா பட நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது,”கடந்த 19ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த சம்பவங்களை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. நம்முடன் சிரித்துப் பேசி, பழகி, பணியாற்றிய சிலர் இப்போது உயிருடன் இல்லை. அவர்கள் மீண்டும் வர முடியாத இடத்திற்கு சென்று விட்டார்கள்.இந்த விபத்து நடந்த இடத்திலிருந்து சில மீட்டர்கள், நிகழ்ந்த கணத்திலிருந்து சில நொடிகள் தான் நான் தள்ளி இருந்தேன்.நான் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினேன். இருந்தாலும் இதனால் ஏற்பட்ட என்னுடைய வேதனையை வார்த்தைகளில் வடிக்க இயலாது. படப்பிடிப்பில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.
இப்போது ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யவே முடியாது இதுபோன்ற சம்பவங்களை படப்பிடிப்பில் பங்குபெறும் அவர்களின் பாதுகாப்பை படநிறுவனம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் அது ஒட்டுமொத்த படக்குழுவின் நம்பிக்கையை தகர்த்து விடும் தற்போது படக்குழுவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன் அதில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு இருந்தால் அவற்றை அவர்கள் தான் ஈடு கட்ட வேண்டும். இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும். நிதி உதவி வழங்க வேண்டும். மேலும் பாதுகாப்பு விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்ற வேண்டும் .எந்தவொரு படப்பிடிப்பையும் தொடங்கும் முன்பு பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என்று பரிசோதிக்க ஒரு நடைமுறையை உருவாக்கவேண்டும். அப்போது தான் நான் உள்பட படப்பிடிப்புக் குழுவினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் ’படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் தான் ஏற்க வேண்டும்” இவ்வாறு கமல்ஹாசன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.