“உச்சநீதிமன்றமே ஆதரவு..நான் பாராட்டினால் தப்பாய்யா ?” குஷ்பூ !

உலக நாகரிகத்துடன் ஒத்துப்போகலேன்னா நம்மை உலக்கையால் அடித்தே கொன்று விடுவார்கள் போல.!

சிகரெட்,மது இதெல்லாம் இப்ப சர்வ சாதாரணமாக பெண்களின் பழக்கத்துக்கு வந்து விட்டது. கார் சாவிகளை மாற்றிக்கொண்டு மனைவிகளையும் மாற்றிக்கொள்வார்களாம். இப்படியெல்லாம் நடக்கலாமா என்று தற்போதைய காலகட்டத்தில் கோபம் கொள்ளலாம். ஆனால் எதிர்வரும்காலங்களில்?

கியாரா அத்வானி என்கிற நடிகையை வைத்து எப்படியெல்லாம் படம் எடுத்தார்கள். செயற்கை கருவியால் சுய இன்பம் அடைகிற காட்சிகளை பார்த்து பாரத கல்ச்சர் பரவசம் கொள்ளவில்லையா?

தற்போது ஒரு படம்.”சுப மங்கல் ஜியாடா சாவ்தான் ” 

இதற்கு “கல்யாணத்த பத்தி ரொம்பவும் எச்சரிக்கையா இரு “என்று அர்த்தமாம்.

கல்யாண சமையல் சாதம் என்று படம் எடுத்த ஆர்.எஸ்.பிரசன்னா தான் இந்த படத்துக்கு டைரக்டர். ஆயுஷ்மான் குரானா ,ஜிதேந்திரகுமார்,நீனா குப்தா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.

அதாவது ஓரின சேர்க்கையை பற்றிய காமடி படம் என்கிறார்கள். 

இந்த படத்தைப் பாராட்டி இருக்கிறார் நம்ம குஷ்பூ.

“இந்த படத்தை நீங்க பாராட்டலாமா?”

“ஓரின சேர்க்கைக்கு  உச்சநீதிமன்றமே ஆதரவு தெரிவித்திருக்கிறது. ஓரின சேர்க்கையை பற்றி வெளியான படத்தை பாராட்டுவது தப்பா?”என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறார் குஷ்பூ.