உலகமே பயந்து கிடக்கிறது. அணு ஆயுத பலத்தினால் உலகத்தை அச்சுறுத்துகிற சீனா அடங்கி ஒடுங்கிப்போய் இருக்கிறது.
கொரானா வைரஸ். கொடிய ,கோரமான நோய் . சீனாவில் உற்பத்தியான இந்த நோய்க்கு மருந்து இல்லை. இதுவரை ஆயிரக்கணக்கில் செத்திருக்கிறார்கள் சீனாவில்.!
சீனாவில் இருந்து வருகிற இறக்குமதிகளை நிறுத்தி வைத்திருக்கின்றன பல நாடுகள்.
ஆணானப்பட்ட டிரம்ப் ஆட்டம் கண்டு போயிருக்கிறார்..
உலகம் மிரண்டு போயிருக்கிற இந்த கொரானா வைரசுக்கு வாழ்த்துப் பாடியிருக்கிறார் நடிகை சார்மி.
ஒரு டிக் டொக் வீடியோவை வெளியிட்டு பேய்ச்சிரிப்பு சிரித்திருக்கிறார்.!
“எல்லா பசங்கங்களுக்கும் ஒரு ஹாய்.!
எதுக்காக என்கிறீர்களா?
கொரானா வைரஸ் டெல்லிக்கும் தெலங்கானாவுக்கும் வந்திருக்காமே ..!வாழ்த்துகள் !!ஹா..ஹா ..ஹா “
இப்படி ஒரு வீடியோ.! நெட்டிசன்கள் “என்ன சார்மி! நட்டு கழண்டு போச்சா?” “பைத்தியம் முத்திருச்சு “என்றெல்லாம் கடுப்பை காட்டியிருக்கிறார்கள்.
சார்மிக்கு என்ன ஆச்சு ? இன்னும் சித்திரை வெயில் வரலியே சுவாமி !அடி பாவி மவளே!