காக்கி சட்டை போடுவதற்கு ஒரு வாகான உடம்பு வேண்டும். மனோபாலா மாதிரியான நடிகருக்கு காக்கி சட்டையை போட்டால் போலீஸ் டிபார்ட்மென்ட் வழக்கு போட்டாலும் நிற்கும். அது காமடி பீஸாக நிற்குமே தவிர கம்பீரம் தேடினாலும் கிடைக்காது.
ஆனால் விஷால் போட்டால் காவல்துறைக்கு கம்பீரம். இன்னும் சிலருக்கு காக்கி சட்டை கச்சிதமாக பொருந்தி வருகிறது.
சக்ரா படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். விஷால் பிலிம் பாக்டரி தயாரித்திருக்கிற இந்த படத்தில் ரெஜினா காசன்ட் ரா வுக்கு விஷாலுக்கு இணையான கேரக்டர்.எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியிருக்கிறார். எழில் இவரது குரு .
“என்ன கதை சார் ?”
“இது ஒரு வித்தியாசமான திரில்லர் .டெக்னிகல் ரீதியானதுன்னு சொல்லலாம்.விஷாலிடம் கதையை சொன்னேன்.எதையுமே சேஞ்ச் பண்ணவேண்டாம் .அப்படியே எடுப்போம்.நானே தயாரிக்கிறேன்னு சொல்லிட்டார். இந்த கதையில் முக்கியமான போலீஸ் ஆபிசர் கேரக்டர் இருக்கு..இந்த கேரக்டருக்கு யாரை தெரிவந்தெடுக்கலாம்னு கேட்டேன்.
அவரே சொன்னபெயர்தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத் . மற்றோரு முக்கியமான கேரக்டருக்கு ரெஜினா காசன்ட் ராவை செலக்ட் பண்ணியதும் விஷால் தான்!” என்கிறார் ஆனந்தன்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியமும், படத்தொகுப்பை சமீர் முகமதுவும் பார்த்துக் கொள்கிறார்கள். கலையை எஸ்.கண்ணன் கவனிக்க, சண்டைக்காட்சிகளை அனல் அரசு அமைத்துள்ளார்.” என்றார்
—