என்னமோ அவனது விதி…எங்கேயோ போன ஏரோபிளேன் இவன் தலையில் வந்து விழுகணும்னு இருந்திருக்கு. !
விழுந்திருச்சி. என்ன பண்றது..அதையே சினிமாவா படமாக்கிட வேண்டியதுதான்.!
அதுக்காகத்தான் ஆட்கள் ரெடியாக இருக்காங்களே!
வி.ஜி ஜெயவந்த் ,பூபதி ராஜா இருவரது தயாரிப்பில் “ஒன் ஷூட் டு பிக்சர்ஸ்’கருத்துருவாக்கத்தில் ‘அசால்ட் அண்ட் ஃ பால்ட் ‘என்கிற பெயரில் தயாராகிறது.
ஹீரோவாக ஜெய்வந்த் நடிக்கிறார்.
நாம் முன்னமே சொன்ன மாதிரி ஒரு சாமானியன் சந்தர்ப்ப சூழ்நிலையினால் ரவுடியை எதிர்கொள்ள நேருகிறது.அதனால் என்ன விளைவுகள் ,எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை.
சகநடிகர்களாக சரவணன் சென்றாயன் ,சோனா ,ரிஷா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.