பேய் ,பிசாசு படங்களை அடுத்து பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற படங்கள் அதிகம் இல்லை.
அடல்ட் காமடி என்றால் அங்கே நடிகைகளுக்கு நிச்சயம் முக்கியத்துவம் இருக்கும்.
விஜயசாந்திக்குப் பிறகு ஆக்சன் பிலிம்கள் அவ்வளவாக வருவதில்லை. ஏனென்றால் அதற்கேற்ற நடிகைகள் கிடைக்கவில்லை.
தற்போதுதான் நந்திதா ஸ்வேதா முன்வந்திருக்கிறார். இவரை வைத்து ஐ.பி.சி 376 என்கிற படத்தை எடுத்திருக்கிறார்கள். ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படமாம்.அப்ப எல்லாமே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டப்பிரிவைத்தான் படத்தின் டைட்டில் குறிக்கிறது.
இந்த ஆக்சன் படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன்.
நிச்சயம் ரத்தக்காயம் இல்லாமல் நந்திதா நடித்திருக்கமுடியாது. மாஸ்டர் புரட்டி எடுத்திருப்பார்.
கதை திரைக்கதை எழுதி படத்தை இயக்கியவர் ராம்குமார் சுப்பாராமன்.
தில்ராஜ் ஒளிப்பதிவாளர் .தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. அதை கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள். பவர்கிங் ஸ்டுடியோ சார்பாக எஸ் .பிரபாகர் படத்தை தயாரித்து இருக்கிறார்.