CAST AND CREW
Production: Beepstone Studios, Kancharla Pardha Saradhi
Cast: Balakrishna Kola, Wamiqa Gabbi
Direction: Gitanjali Selvaraghavan
Screenplay: Gitanjali Selvaraghavan
Story: Gitanjali Selvaraghavan
Music: Amrit
Background score: Amrit
Cinematography: Sridhar
Editing: Vasanth Rukesh
டேட்டிங் என்பதில் தவறில்லை என்று நினைக்கும் வாமிகாவுக்கும் , கல்யாணத்துக்குப் பிறகுதான் எல்லாம் என்று நினைக்கும் பாலகிருஷ்ணாவு க்கும் திருமணம் நடக்கிறது. அதற்குப் பிறகு அவர்கள் என்ன ஆகிறார்கள்? என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன? எந்த மாதிரி முடிவெடுக்கிறார்கள் என்பது தான் மாலை நேரத்து மயக்கம் படத்தின் மீதிக்கதை! மாலை நேரத்து மயக்கம் பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. அந்த டாஸ்மாக் பாடலுக்கு மட்டும் எடிட்டர் ருக்கேஷ் தயங்காமல் கத்தரி போட்டிருக்கலாம்.ஸ்ரீதரின் ஒளிப்பதிவு படத்துக்குபெரிய பலம். பொதுவாக செல்வராகவன் படங்கள் அனைத்துமே தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் படங்கள். புதிய தலைமுறையினரை கவரக் கூடியவை தற்போது வெளியாகியுள்ள ‘மாலை நேரத்து மயக்கம்’ படமும் அப்படி தான். படத்தில் இருக்கும் காட்சிகள் ஆண்டாண்டு காலமாக பல குடும்பங்களில் பூகம்பமாக வெடிக்கும் பிரச்சனை தான். ஆனால் அதை திரையில் காட்டியவிதம் தான் இந்தப்படம் செக்ஸ் தான் சந்தோசம் என நினைக்கும் கணவன் அல்லது மனைவி இருவருக்கு புரிதல் எங்கு விடுபட்டு போகிறது என்பதை பற்றியது தான் இந்த படத்தின் கதை. செல்வராகவன் இயக்கினால் எப்படி இருக்குமோ அதேபோல் தான் இந்த படத்தை இயக்கி உள்ளார் அவரது மனைவி கீதாஞ்சலி. படத்தில் இடம்பெறும் ‘சில ஆம்பளைங்க அப்படித் தான் முழுசா பாக்குற வரை பின்னாலேயே சுத்துவாங்க ,கல்யாணமான புது சம்சாரம் எப்டிடா அப்ரோச் பன்றது,டின்னருக்கு போகலாமான்னு நாசுக்கா கேளு,எல்லாரும் சாப்டிட்டு வச்சத சாப்பிட நான் ஒன்னும் முட்டாள் கிடையாது’. போன்ற படத்தின் பல விஷமத் தனமான வசனக்காட்சிகள் கல்லூரிக்காளைகளை வசியப்படுத்தும். மொத்தத்தில் இந்த படம் புதிய ,இளைய, விடலை , தலைமுறையினரை மட்டுமே மயக்கும்.
rating-2/5.