வரும் 22-ம் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க! – பிரதமர் மோடி .
வெகுவேகமாக பரவி வரும் கொரோனாவைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகள் போர்க்கால அடிப்படையில் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இந்தியாவிலும் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இந்திய பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாம் ஆரோக்கியமாக இருந்தால், உலகம் ஆரோக்கியமாக இருக்கும். இதுவே நம் தாரக மந்திரம். உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது கொரோனா. உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது.கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது.கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து, முன்கூட்டியே அறியும் வசதியோ இதுவரை இல்லை.
வரும் 22-ம் தேதி ஞாயிறு காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். 22-ம் தேதி கொரோனா வைரசுக்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும்.அத்தியாவசிய சேவைகளில் பனிபுரிவோர் தவிர மற்றவர்கள் யாரும் 22-ம் தேதி வெளியே வர வேண்டாம். மக்கள் கூடுவதை தவிர்த்து முடிந்தளவுக்கு தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவது மிக முக்கியம்.
22-ம் தேதி அன்று மாலை 5 மணிக்கு உங்கள் வீட்டின் வாசலில் நின்று அத்தியாவசியப்பணியில் ஈடுபடுவோருக்கு கைதட்டல் மூலம் நன்றி கூறுங்கள்.அவசிய தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும்.
வேலையில்லாத நாள்களில் பணியாளர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்தை பிடிக்க வேண்டாம்.கொரோனா வைரஸ் காரணமாக ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. பொருளாதார மந்தநிலையைபோக்குவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். தற்போது நாட்டு மக்களிடம் நான் ஒத்துழைப்பை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.