தமிழ்ச்சினிமாவில் புத்திசாலிகளுக்கும் ,புரட்சியாளர்ளுக்கும் பற்றாக்குறை வந்ததில்லை.
ஆனால் அவர்களால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை.
இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற கோலிவுட்டின் கூண்டுக்குள் அடைபட்டு விடுகிறார்கள்.
வணிக ரீதியான சினிமா என்கிற வர்த்தகம் அவர்களது கரங்களை கட்டிப்போட்டு விடுகிறது.
கட்டவிழ்த்து வருகிறவர்களும் காலப்போக்கில் வணிகத்துக்கு பழகிப்போய் விடுகிறார்கள்.
காரணம் சர்வைவல் .வாழ்ந்தாகவேண்டும் என்கிற நிலை.
மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் துணிச்சலாக கருத்துக்களை சொல்லக்கூடியவர்.
“வந்தேறிகளை விரட்டுங்கள்!” என அவர் டிவீட் பண்ணியதை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம்.
அவர் யாரை சொல்கிறார் என்பது படித்த பிறகுதான் தெரியும்!
“விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய வந்தேறி வைரஸ் இன்று பஸ் ஏறி ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறது. வந்தேறிகளை விரட்ட வேண்டும் எனும் கொள்கையை இந்த ஒரு விடயத்தில் மட்டும் ஏற்கிறேன். நாம் வெளியே வராமல் வீட்டிற்குள்ளிருந்து நடத்தும் போர் இது #StayHome”
நவீனின் இந்த டிவீட்டுக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து பலர் டிவீட் செய்திருக்கிறார்கள்.
இந்த தனித்து வாழும் காலத்திலாவது நன்றாக சிந்தித்து கதையை பண்ணுங்க என்கிற ஆலோசனையும் உண்டு.