நோய்களுக்கான புதிய கண்டுபிடிப்பு மருந்துகளை எலி,குரங்கு ஆகியவற்றின் மீது செலுத்தி விஞ்ஞானிகள் சோதனை செய்வது வழக்கம். உலகம் முழுவதும் இந்த முறையில்தான் புதிய கண்டுபிடிப்புகள் சோதிக்கப்படுகின்றன.
“எலி,குரங்கு நமக்கு என்ன கெடுதல் செய்தது? பாவம் அவைகளை விட்டு விடுங்கள். சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை பயன் படுத்துங்கள் “என்று ஒரு நடிகை டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
அவர் சவூதியை சேர்ந்த நடிகை. பெயர் மறம் அப்துல்அஜீஸ் .
இவரின் பதிவைப் படித்தவர்கள் கடுப்பாகி விட்டார்கள். கண்டனங்கள் குவிந்து கொண்டிருக்கிறது.