ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீடுகளில் முடங்கிப்போன நடிகர், நடிகைகள் தங்களது சமூக வளைதளத்தில் ஆட்டம் பாட்டம் என வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ஆர்யாவை காதலித்து மணந்த சாயிஷா சைகல் , உலக ரசிகர்களை கவர்ந்த ஹாலிவுட் பாப் பாடகி ஜெனிபர் லோபஸின் பாடல் ஒன்றுக்கு அவரை போலவே அட்டகாசமான ஸ்டெப் வைத்து செம ஆட்டம் ஆடி அசத்தியுள்ள வீடியோ ஒன்றை தற்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்து சாயிஷா, பிரபல நடிகை, பாடகி, டான்சர் ஜெனிபர் லோபஸ் அவர்களின் இசை நிகழ்ச்சியை நேரில் ஒருமுறையாவது காண வேண்டும் என்பது எனது வாழ்நாள் ஆசை. இருப்பினும் இந்த நேரத்தில் அவருடைய பாடலுக்கு நடனம் ஆடியது பெரும் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார்.
#JLoSuperBowlChallenge 💃#LockdownActivities pic.twitter.com/2suPI3bRYg
— Sayyeshaa (@sayyeshaa) April 16, 2020