நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா விழிப்புணர்வு குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது,”இன்னும் இந்த கொரோனா சீரியஸ் புரியாம நெறைய பேரு வீட்டை விட்டு வெளியே வந்துகிட்டு இருக்காங்க . இந்த வீடியோவை நான் வெளியிட்டேன். அவங்களில் ஒரு 10 பேருக்காவது இந்த வீடியோ பொய் சேராதா என்பதற்காக தான்இந்த வீடியோவை நான் வெளியிட்டேன். இந்த வீடியோவை பார்த்து திருந்தி வீட்டை விட்டு வெளியேறாம இருந்தா எனக்கு சந்தோசமே. எனவே நாம் எல்லோரும் வீட்டுக்கு உள்ளே இருப்போம். வீட்டிற்குள் இருக்கும் போது நம்மை நாம் பாதுகாப்பதற்காக பல விஷயங்களை சொல்லி இருக்கின்றார்கள். அதனை பின்பற்றுங்கள். இதுல முதல் ஸ்டெப்பே நாம, வீட்டை விட்டு வெளியே போகாம இருப்பது தான். இதை செஞ்சா நிச்சயம் நாம் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும் .எல்லாத்தையும் முறியடிக்க முடியும்.அப்படிங்றது தான். நான் எப்பவும் நம்புறது ஒண்ணே ஒண்ணுதான் உலகின் தலைசிறந்த சொல் ,செயல்.. செஞ்சு காட்டுவோம்”.இவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
Salute our #CoronaWarriors @Siva_Kartikeyan @Arunrajakamaraj @PIB_India @airnews_Chennai @DDNewsChennai @ROBCHENNAI_MIB pic.twitter.com/hONpcS7b2D
— PIB in Tamil Nadu 🇮🇳 #StayHome #StaySafe (@pibchennai) April 22, 2020